2026 மே 02, சனிக்கிழமை

ஆதரவற்ற சிறுவர்களின் கல்வி நலனுக்கான இல்லம்

Kogilavani   / 2013 பெப்ரவரி 11 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


ஆதரவற்ற சிறுவர்களின் கல்வி நலனுக்கான இல்லமொன்று மட்டக்களப்பு மயிலம்பாவெளியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

உதவும் கரங்கள் நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.ஞானம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆயர் கலாநிதி ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை கலந்துகொண்டு இந்நிலையத்தினை திறந்துவைத்தார்.

திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இவ் இல்லத்தினை திறந்து வைத்தார்.

தற்சமயம் திருகோணமலை மறை மாவட்ட ஆயராக இருக்கும் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை மட்டக்களப்பு ஆயராக இருந்த காலத்தில், கடந்த 2010 ஆம் ஆண்டு இந்தக் கட்டிடத்துக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

சுமார் ஒன்றரைக் கோடி ரூபாய் செலவில் இக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிதியுதவியை சிறுவர் உதவி புனர்வாழ்வு மற்றும் கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் எனும் கனேடிய உதவியமைப்பு (ஊசுநுP) வழங்கியிருந்தது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .