2026 மே 02, சனிக்கிழமை

செப்பனிடப்படும் வீதி அடிக்கடி சேதமடைந்துவிடுவதாக பொதுமக்கள் விசனம்

Kogilavani   / 2013 பெப்ரவரி 16 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜதுசன்


மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசசெயலகப் பிரிவு வீதி பல தடவைகள் புனரமைக்கப்பட்டும் அடிக்கடி சேதமடைந்து விடுவதாகவும் இதனால்
தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அண்மையில் இவ்வீதி வீதி அபிவிருத்தி அதிகார சபையால் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ஓரிரு நாட்களில் அவ்வீதி மீண்டும் சேதமடைந்துள்ளதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் உரிய அதிகாhரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இவ்வீதி மீண்டும் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால், வெள்ளம் வருவதற்கு முன்;பே இவ்வீதி சேதமடைந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி புனரமைக்கப்படும் வீதி மீண்டும் மீண்டும் சேதமடையாதவாறு இருக்கும் வகையில் புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .