2026 மே 02, சனிக்கிழமை

கொடுவாமடு, சவுக்கடி பிரதேசங்களில் நடமாடும் பொலிஸ் சேவை நிலையங்கள்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 17 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடுவாமடு பிரதேசத்திலும் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி பிரதேசத்திலும் நடமாடும் பொலிஸ் சேவை நிலையங்கள்; நேற்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு  மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜந்த சமரகோன் இவ்விரு பிரதேசங்களிலும் நடைபெற்ற இதற்கான நிகழ்வுகளில்; பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நடமாடும் பொலிஸ் நிலையங்களின் சேவைகளை ஆரம்பித்து வைத்தார்.

கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிறிமா லேகம் தலைமையில் இடம்பெற்ற கொடுவாமடு பிரதேசத்தின் நடமாடும் பொலிஸ் சேவை நிலையத் திறப்பு விழாவில் ஏறாவூர்ப் பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர்  ஆனந்த ரத்;னசூரிய, ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காஞ்சன கொடகும்பர வின் தலைமையில் இடம்பெற்ற சவுக்கடி பிரதேசத்தின் நடமாடும் பொலிஸ் சேவை நிலையத் திறப்பு விழாவில்  ஏறாவூர்ப் பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர்  ஆனந்த ரத்;னசூரிய, சவுக்கடி நடமாடும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.எம்.ரன்பண்டா, ஏறாவூர் நகரபிதா அலிஸாஹிர் மௌலானா  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நடமாடும் சேவைகள் 14 நாட்களுக்கு நடைபெறவுள்ளன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .