2026 மே 09, சனிக்கிழமை

dd

பருத்திச்சேனை விபத்தில் இந்திய பிரஜை பலி

Kogilavani   / 2013 மார்ச் 18 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எஸ்.சசிக்குமார், தேவ அச்சுதன்

வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பருத்திச்சேனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இந்திய பிரஜை ஒருவர் பலியாகியுள்ளார்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற  இவ்விபத்தில் தமிழ் நாட்டை சேர்ந்த மணியம் என்பவரே உயிரிழந்ததாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும்போது பின்னால் வந்த டிரக்டருக்கு வழிவிடுவதற்காக மோட்டார் சைக்கிளை ஓரமாக்கியுள்ளார். இதன்போது, சைக்கிள் கவிழ்ந்து அவர் கீழே விழுந்துள்ளார். இந்நிலையில்  பின்னால் வந்த டிரக் அவர் மீது மோதியதில் அவர் ஸ்தலத்திலேயே  உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தாண்டியடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் டிரக்டர் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பிலான விசாரணையை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .