2026 மே 07, வியாழக்கிழமை

ஒந்தாச்சிமடத்தில் சித்திரை திருநாள் நிகழ்வு

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 04 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்தீன்

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒந்தாச்சிமடத்தில் சித்திரை திருநாள் நிகழ்வொன்று நடைபெறவுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 13ஆம் 14ஆம் திகதிகளில் இந்த சித்திரை திருநாள் நிகழ்வு நடைபெறவுள்ளதாக  மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் தி.மலர்ச்செல்வன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் ஒந்தாச்சிமடத்திலுள்ள முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. இதன்போது கலை நிகழ்ச்சிகளும் பாரம்பரிய கலாசார விளையாட்டுக்களும்; நடைபெறவுள்ளன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .