2026 மே 07, வியாழக்கிழமை

பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் பிரதான வைபவம் ஆரம்பித்து வைப்பு

Kogilavani   / 2013 ஏப்ரல் 05 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன், ஜவ்பர்கான்


பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 5000 ஆரம்ப பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆரம்ப பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் பிரதான வைபவம் மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள நாவற்குடா தருமரத்திணம் வித்தியாலயத்தில் இன்று காலை நடைபெற்றது.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இந்த பாடசாலையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மற்றும் மட்டக்களப்பு வலய கல்விப ;பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர் இராஜன் மயில்வாகனம், மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.டேவிட், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சுதா உட்பட அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது இத்திட்டத்தின் கீழ் இப்பாடசாலையின் அபிவிருத்தி வேலைகளுக்கான நினைவுப்பலகை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன் பாடசாலை சுவர்களுக்கு வாண்ம் பூசும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டது. பாடசாலை வளாகத்தில் மரக்கண்டுகளும் நடப்பட்டன.

5000 பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் கட்டத்தில் 70 பாடசாலைகளும் இரண்டாம் கட்டத்தில் 9 பாடசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இதன் ஒவ்வொரு பாடசாலையின் அபிவிருத்திக்காகவும் ஐந்து இலட்சம் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .