2026 மே 07, வியாழக்கிழமை

விபசாரத்தில் ஈடுபட்ட மூவினங்களையும் சேர்ந்த மூன்று ஜோடிகள் கைது

Kanagaraj   / 2013 ஏப்ரல் 05 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எஸ்.வதனகுமார்

மட்டக்களப்பில் ஹோட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த பெண்கள் மூவரையும் ஆண்கள் மூவரையும் மட்டக்களப்புப் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பில் உள்ள ஹோட்டல்களில் விபச்சார நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக கிடைத்த தகவலையடுத்தே இன்றிரவு சுற்றிவளைப்பு தேடுதலை மேற்கொண்டு அவர்களை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வி.இந்திரனின் உத்தரவிற்கமைய நீதிமன்ற அனுமதியுடன் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கிஞ்சிலி குணசேகர தலைமையிலான குழுவினர் குறித்த ஹோட்டலை முற்றுகையிட்டு அநாகரிகமான முறையில் இருந்த அறுவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆண்களில் இருவர் படைத்தரப்பில் முக்கிய பதவிகளை வகிக்கப்பவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மற்றுமொருவர் அக்கறைப்பற்றைச்சேர்ந்த முஸ்லிம் இனத்தைச்சேர்ந்தவராவார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்களில் முஸ்லிம் பெண் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்றும் சிங்களப் பெண் கந்தளாயைச் சேர்ந்தவர் என்றும்  தமிழ்ப் பெண் பருத்திச்சேனையைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0

  • IBNU ABOO. Saturday, 06 April 2013 04:48 AM

    ஆஹா இதுவல்லவோ மூவின ஒற்றுமை.

    Reply : 0       0

    mubeyamah Sunday, 07 April 2013 02:03 AM

    3 இடத்துக்கும் சுனாமி மீண்டும் வேண்டும்.

    Reply : 0       0

    ali Thursday, 11 April 2013 01:52 PM

    பாவம் இவர்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .