2026 மே 07, வியாழக்கிழமை

'ஜனாதிபதி பதவிக்கு வந்த பின் பாரிய மாற்றங்கள் நடந்துள்ளன: -அமைச்சர் பஷீர்

Kogilavani   / 2013 ஏப்ரல் 06 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
, எம்.எஸ்.நூர்தீன்

'ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் இந்த நாட்டில் பாரிய மாற்றங்கள் நடந்துள்ளன. தற்போது, வீதிகளில் குண்டுகள் வெடிப்பதில்லை. யாரும் தரையிலிருந்து விமானத்திற்கு சுடுவதுமில்லை. விமானத்திலிருந்து தரையை நோக்கி குண்டுகள் போடுவதுமில்லை' என அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

ஏறாவூர் அமீரலி வித்தியாலயத்தில் இடம்பெற்ற ஐயாயிரம் பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் எஸ்.அப்துல் கபூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,
'தூர இடத்திற்கு தொழிலுக்காகச் சென்ற கணவர் உயிருடன் திரும்பி வருவாரா வரமாட்டாரா என்று இப்பொழுது மனைவிமார் ஏங்கிகொண்டு இருப்பதில்லை.

காலடி எடுத்து வைக்க முடியாதிருந்த தமது ஆயிரக்கணக்கான ஏக்கர் பூர்வீக வாழ்விடங்களில் எல்லோரும் கால்மிதிக்கிறார்கள்.

கடைகளில் யாரும் கப்பம் கேட்பதில்லை. பொலிஸாரும் இராணுவத்தினரும் வீதிப் பரிசோதனை செய்த பின்னர் தாங்கள் விரும்பிய நேரத்திற்கு போக்குவரத்துச் செய்ய மக்களை அனுமதிக்கும் நிலைமை கிடையாது.

ஏனென்றால் இன்று நாட்டில் யுத்தமில்லை. முப்பது வருடங்களாக இருந்த இத்தகைய நிலைமைகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தித் தந்தவர்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

வடக்கு கிழக்கில் கால்நடைகள் கூட கடந்து செல்ல முடியாததாக இருந்த வீதிகள் இப்பொழுது கார்பெட்டாகவும் கொங்கிரீற் வீதிகளாகவும் மாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

நமது பிள்ளைகள் கொழும்புக்குச் சென்று கடைகளில் வேலை செய்கின்றார்கள். சுதந்திரமாகப் பயணிக்கின்றார்கள்.
ஆகவே நாடு முழுவதிலும் ஒரு தலைகீழான சாதகமான பெரிய மாற்றம் வந்திருக்கின்றது.

  Comments - 0

  • vallarasu Sunday, 07 April 2013 04:16 PM

    உண்மையில் பாரிய மாற்றம்தான் உங்கள் தலைவர் செய்துள்ளார். வெட்கம் இல்லாமல் அவரைப்பற்றி புகழ்ந்து பேசுகிறீர்களே... வெட்கம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .