2026 மே 06, புதன்கிழமை

பாலங்களின்றி விவசாயிகள் சிரமம்: உடனடியாக அமைக்குமாறு உத்தரவு

Kogilavani   / 2013 ஏப்ரல் 07 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன்
, கே.எஸ்.சசிக்குமார்

ஏறாவூர்பற்று, மாவடிஓடை வாயிலான் பகுதிக்கு நேற்று சனிக்கிழமை விஜயம்மேற்கொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன், இப்பகுதியில் பாலங்களை நிர்மாணிப்பதற்கான வேலைதிட்டங்களை உடனடியாக ஆரம்பிக்கும்படி உத்தரவிட்டார்.

இப்பகுதியில் காணப்படும் போக்குவரத்து பிரச்சினைக் காரணமாக விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இப்பகுதிக்கு விஜயம்மேற்கொண்டு பஞ்சர் ஓடை, வண்ணாத்தி ஆறு மற்றும் சில்லிக்கொடியாறு என்பவற்றை பார்வையிட்டதுடன் அதற்குரிய பாலங்களை அமைப்பதற்கான வேலைத்திட்டங்களை உடன் ஆரம்பிக்கும்படி உத்தரவிட்டார்.

இத்திட்டத்திற்கான நிதி ஜெய்க்கா திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இதன்போது அவர் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .