2026 மே 06, புதன்கிழமை

பூர்த்தி செய்யப்படாத காதி நீதிமன்றக் கட்டிட திறப்பு விழா ஒத்திவைப்பு

Super User   / 2013 ஏப்ரல் 15 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஓட்டமாவடி காதி நீதிமன்றக் கட்டிடம் பூர்த்தி செய்யப்படாத நிலையில் அந்த கட்டிடத்தினை திறந்துவைப்பது தொடர்பான வைபவத்தினை காதி நீதிபதி தடுத்து நிறுத்தியுள்ளார்.

நீதி அமைச்சின் நிதியுதவியில் சுமார் 44 லட்சம் ரூபா செலவில் ஓட்டமாவடி மாஞ்சோலைப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்திற்கான காதி நீதிமன்றக் கட்டிடம் கடந்த சனிக்கிழமை  நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமினால் திறந்துவைக்கப்படவிருந்தது.

இதற்கான அழைப்பிதழ்கள் நீதி அமைச்சின் செயலாளரினால் பிரதேசத்தின் முக்கியஸ்தர்களுக்கு  அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் குறித்த கட்டிடம் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமல் திறப்பதற்கு காதி நீதிபதி ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

காதி நீதிமன்றத்தினை திறப்பது தொடர்பாக பலர் காதி நீதிபதியிடம் எடுத்துக் கூறியபோதும் அக் கோரிக்கைகள் எதுவும் செவிமடுக்கப்படவில்லை. இதனால் இந்தக் கட்டிடம் தொடர்பான திறப்பு விழா வைபவம் பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .