2026 மே 07, வியாழக்கிழமை

மட்டு.அம்பாறை பிரதான வீதியில் கட்டாக்காலிகளால் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு

Kogilavani   / 2013 ஏப்ரல் 22 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரி.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு –அம்பாறை பிரதான வீதியில் எந்நேரமும் பெருமளவில் காணப்படும் கட்டாக்காலி மிருகங்களால் வீதி விபத்துக்கள் அதிகரித்துவருவதுடன் வாகன சாரதிகள் பெரும் அசௌகரியங்களை எதிர் கொண்டுள்ளனர்.

களுவாஞ்சிக்குடி ஆரையம்பதி காத்தான்குடி மற்றும் மண்முனை வடக்கு செங்கலடி ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளின் பிரதான வீதிகளின் நடுவில் பெருமளவிலான மாடுகள் நாய்கள் ஆடுகள் குவிந்து நிற்கின்றன.

வேகமாய் வரும் வாகனங்கள் இக்கட்டாக்காலிகளில் மோதுண்டு அடிக்கடி வீதி விபத்துச்சம்பவங்கள் நிகழ்கின்றன.

குறித்த உள்ளுராட்சி சபைகள் இக்கட்டாக்காலிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .