2026 மே 07, வியாழக்கிழமை

காத்தான்குடியில் பொதுமக்கள் தொடர்பாடல் ஒலிபெருக்கி கட்டமைப்பு

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 22 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகரின் பிரதான வீதியிலுள்ள மின்கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள பொதுமக்கள் தொடர்பாடல் ஒலிபெருக்கிக் கட்டமைப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆரம்பித்துவைத்தார்.

பொதுமக்கள் தொடர்பாடல் ஒலிபெருக்கிக் கட்டமைப்பு இலங்கையிலேயே முதல் தடவையாக காத்தான்குடியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி நகரத்தின் பிரதான வீதியை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ், பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினாலும் அவரின் நிதியொதுக்கீட்டிலும் காத்தான்குடியில் பொதுமக்கள் தொடர்பாடல் ஒலிபெருக்கிக் கட்டமைப்பு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள மின்கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள இந்த விசேட ஒலிபெருக்கிக் கட்டமைப்பு மூலம் ஐவேளை தொழுகைக்கான அதான் ஒலிபரப்பும் விசேட தினங்களின்போது இஸ்லாமிய கலாசாரத்துக்கு அமைவான நிகழ்ச்சிகளும் இதில் ஒலிபரப்பப்படும் என காத்தான்குடி நகர சபையின் பதில் தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம் தெரிவித்தார்.

காத்தான்குடி நகர சபையின் பதில் தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  சிப்லி பாரூக்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .