2026 மே 07, வியாழக்கிழமை

ஜெனிவாவில் தீர்மானங்களை நிறைவேற்றாவிட்டால் பாரதூரமான கதியாகும்: செல்வராசா எம்.பி

Super User   / 2013 ஏப்ரல் 22 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

ஜெனிவாவில் ஏற்படுத்தப்பட்ட தீர்மானங்களை இந்த அரசு நிறைவேற்றாது விட்டால் பாரதூரமான கதிக்கு ஆளாகிவடும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

முனைத்தீவு மேன் பவர் விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்ட விளையாட்டு மற்றும் கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த விழாவில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"பயங்கரவாத தடைச்சட்டத்தினை அறிமுகப்படுத்தியவர் எமது மட்;டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான கே. டபிள்யூ. தேவநாயகம். அவர் கொண்டு வந்த தடைச்சட்டம் இன்று வரையும் உள்ளது.

இச்சட்டத்தின் மூலம் எமது தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பற்பல வேதனைகளை அனுபவிக்கின்றனர். அப்படியான சட்டத்தினை நீக்க முடியாத அரசாங்கம் அவசரகால சட்டத்தின் மூலம் எமது இளைஞர்களை கைது செய்து அவர்களை விடுவிக்காது அவர்கள் சிறையில் இருக்கும் போதே பயங்கரவாத தடைச்சட்டத்தினை ஏற்படுத்தி அவர்களை இன்னும் தடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றது.

இன்று ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் சிறைச்சாலையிலே வாடிக்கொண்டிருக்கின்றார்கள்.  அதில் முனைத்தீவு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களும் அடங்கலாம். அது மட்டுமல்லாது இந்த கிழக்கிலங்கை 2007ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டதன் பின் ஏறக்குறைய 300 இளைஞர்கள் காணாமல் போயிருக்கின்றனர். அவர்கள் தொடர்பாகவும் இன்னும் தகவல் இல்லை.

இதற்கு பொறுப்பு கூற வேண்டிய அரசாங்கம் இன்னும் எதுவித பொறுப்பும் கூறவில்லை. அபிவிருத்தி என்ற பெயரில் பகட்டு வேலை காட்டும் இந்த அரசு தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யப் போவதில்லை. ஆனால் சிலர் தமது தேவைகளை நிறைவேற்றுவதற்காக தமது செத்துக்களை காப்பாற்றுவதற்காக தமது வயிற்றை வளர்ப்பதற்காக அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றார்கள்.

தமது மூதாதையர்களின் அரசியல் எமக்கு தேவையில்லை அவர்களின் வழியில் செல்லமாட்டோம் என்று கூறியவர்கள் இந்த பட்டிருப்பு தொகுதியின் அமைப்பாளர் அவரை விளம்பரப்படுத்தும் பதாதையில் ஏன் ராசமாணிக்கம் ஐயாவின் படத்தினை பிரசுரிக்க வேண்டும்.

அந்தளவுக்கு அறிக்கைகளை செவ்வனே வழங்க முடியாதவர்கள் இன்று தமிழ் மக்களை ஆள வேண்டும் என முன்வந்துள்ளனர். தமிழர்களை காட்டிக் கொடுக்கின்ற இந்த அரசியல்வாதிகள் நாங்கள் தமிழ் மக்களுக்காக சேவை செய்ய போகின்றோம் என்று கூறிக்கொள்கின்றனர்.

அவர்களை நாம் அனுமதிக்க முடியாது. தமிழ் மக்களுக்கு என்ன இன்னல்கள் ஏற்பட்டாலும் எந்த சோதனை வேதனைகளிலும் தமிழ் மக்களை காப்பாற்றும் ஒரே ஒரு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பதை யாரும் மறுக்க முடியாது.

இப்போது வந்த அரசியல்வாதிகள் கூறுகின்றனர். நாம் முகமூடி அணிந்திருக்கின்றோம். எமது முகமூடியை கிழிக்க போகிறார்களாம் யார் முகமூடி அணிந்தவர்கள். விழா எடுப்பதற்காக முகமூடி அணிந்து விட்டு விழா முடிந்ததும் முகமூடியை கழற்றிய நீங்களா தமிழ் தேசிய கூட்டமைப்பின் முகமூடியை கிழிக்க இருக்கிறார்களாம் முடியுமா இவர்களுக்கும் இவர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது என கேட்கிறேன்.

அந்த அளவிற்கு இவர்கள் அரசியல் நடத்துவதற்கு படடிருப்பு மக்கள் மடையர்கள் அல்ல என்பதனை இந்த அரசியல்வாதிகள் உணாந்து கொள்ள வேண்டும். இந்த முனைத்தீவு மக்களுக்காக இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்நேரமும் இருக்கும்' என்றார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .