2026 மே 07, வியாழக்கிழமை

மரண வீட்டுக்கு வந்தவர்களிடம் கொள்ளையிட்ட சந்தேகநபர் கைது

Super User   / 2013 ஏப்ரல் 22 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மரண வீட்டுக்கு வந்தவர்களிடம் கொள்ளையிட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளியில் பிரதேசத்தில் நேற்று முன்தினம் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் தொடர்புபட்ட சந்தேக நபரைத் தாம் புத்தளம் சென்று கைது செய்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபா பணமும் சுமார் ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளும் கொள்ளைடிக்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸாருக்கு  கிடைத்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மரணச் சடங்கிற்காக சந்திவெளியிலுள்ள வீடொன்றிற்கு புத்தளத்திலிருந்து வந்திருந்தவர்கள் மரணச் சடங்கு இடம்பெற்ற வீட்டிற்கு அடுத்த வீட்டில் புகுந்து நகைகளையும் பணத்தையும் சுருட்டிக் கொண்டு மறைந்ததாகவும் அவர்களில் ஒருவரை தாம் கைது செய்திருப்பதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளைச் சம்பத்துடன் தொடர்புபட்ட மற்றைய நபர் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார்  கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .