2026 மே 07, வியாழக்கிழமை

சட்டவிரோத மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டன

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 23 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்,- ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது சட்டவிரோத மீன்பிடி வலைகளை கைப்பற்றியுள்ளதாக அம்மாவட்ட கடற்றொழில் நீரியல்வளங்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டொமிங்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

ஏறாவூர், தன்னாமுனை, மயிலம்பாவெளி, ஆறுமுகத்தான் குடியிருப்பு, தம்மானம்வெளி, பன்குடாவெளி ஆகிய பகுதிகளில் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 12.5 இலட்சம் ரூபா பெறுமதியான இழுவை வலைகளையும் தங்கூசி வலைகளையும் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை மண்டூர் வாவியில் 7.5 இலட்சம் ரூபா பெறுமதியான 7 இழுவை வலைகளையும்  ஒரு தங்கூசி வலையும் 7 தோணிகளையும் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறினார். 

3 அங்குல கண்ணுடைய வலை, இழுவை வலை, முக்கூட்டு வலை, தங்கூஸ் வலை மற்றும் ஏதேனும் பொறிமுறைக்குட்படுத்திய படகு என்பன வாவியில் மீன்பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு வாவியில் சுமார் 112 மீனினங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 25 மீனினங்கள் அருகிவிட்டன.  இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டதாகவும் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளங்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டொமிங்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .