2026 மே 09, சனிக்கிழமை

dd

'முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவார்கள் என்ற சந்தேகம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது'

Super User   / 2013 ஏப்ரல் 28 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்தி போராடுபவர்கள் என்ற சந்தேகம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.

இதனாலேஆய பொது பல சேனா போன்ற அமுக்கக் குழுக்களை பயன்படுத்தி, இந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வதற்கு இந்த அரசாங்கம் முனைகிறது என அவர் குறிப்பிட்டார்.

ஏறாவூரிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதி தவிசாளர் எம்.எஸ். சுபைர்,

"நாட்டில் தமிழர்கள் ஆயுதம் ஏந்தி போராடியது போன்று முஸ்லிம்களும் ஆயுதம் ஏந்தி போராடுபவர்கள் என்ற சந்தேகம் முஸ்லிம்கள் மீது அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. இதன் காரணமாகவே பொது பல சேனா போன்ற அமுக்கக் குழுக்களை பயன்படுத்தி அவ்வாறான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வதற்காக இந்த அரசாங்கம் முனைகிறது.

அரசாங்கத்துடன் முஸ்லிம் சமூகம் அந்நியொன்னியத்துடன் இருந்து வருகின்ற இந்த நிலையில், அரசாங்கம் முஸ்லிம் சமூகத்தின் மீது கொண்டுள்ள இந்த சந்தேகம் மிகவும் ஆபத்தானதாகும். இதனால் நாட்டில் இன முறுகல் ஏற்படக்கூடிய நிலைமைகள் காணப்படுகின்றன. இந்த முஸ்லிம் சமூகத்தின் மீது இவ்வாறான சந்தேகங்கள் ஏற்பட்டால் அரசாங்கம் நேரடியாக முஸ்லிம் சமூக தலைவர்கள் மற்றும் உலமாக்களை சந்தித்து சந்தேகங்களை நிபர்த்தி செய்துகொள்ளலாம்.

அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இவ்வாறான சந்தேகங்களக்கு முஸ்லிம் தலைவர்கள் மற்றும் உலமாக்கள் தெளிவான பதில்களை கொடுக்க வேண்டும். அவ்வாறு தெளிவுபடுத்துவதனால் அரசின் சந்தேகங்களை உடனுக்குடன் திருத்திக் கொள்ள முடியும். இந்த நாட்டில் முஸ்லிம்கள் சம்மந்தமாக எழுகின்ற சந்தேகங்களக்கு முஸ்லிம் சமூகம் அதற்கான பதில்களை வழங்க பின் நிற்கக்கூடாது" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .