2026 மே 09, சனிக்கிழமை

dd

தேனீ வளர்ப்பு தொடர்பான கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2013 மே 07 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


'திவிநெகும' வாழ்வாதார கருத்திட்டத்தின் கீழ், தேனீ வளர்ப்பு தொடர்பான ஒரு நாள் செய்முறைப் பயிற்சிக் கருத்தரங்கு நடத்தப்பட்டது.

பேத்தாழை கிராம அலுவலகர் பிரிவில் நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில் வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகள் பங்குபற்றினர்.

இதற்கான வளவாளர்களாக கலந்துகொண்ட வாழைச்சேனை பிரதேச விவசாய போதனாசிரியர் ஆர்.பிரபாகரன், விவசாய உத்தியோகத்தர் வீ.பேரின்பராஜா, விவசாய பாடவிதான உத்தியோகத்தர் வீ.லிங்கேஸ்வரராஜா ஆகியோர் இது தொடர்பில் விளக்கமளித்தனர்.

வாழைச்சேனை சமுர்த்தி மகா சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் தேவமனோகரி பாஸ்கர் தலைமையில் நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில் பிரதேச செயலாளர் ரீ.தினேஸ், கிராம அலுவலக உத்தியோகத்தர், பட்டதாரி பயிலுநர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .