2026 மே 07, வியாழக்கிழமை

இறால் வளர்ப்பினை தடுக்குமாறு மகஜர்

Kogilavani   / 2013 மே 14 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எஸ்.சசிக்குமார்

வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கரையாக்கந்தீவில் மேற்கொள்ளப்பட்டுவரும் இறால் வளர்ப்பினை தடைசெய்யுமாறு கரையாக்கந்தீவு பொது அமைப்புக்கள் பிரதேச செயலாளரிடம் மகஜர்களினுடாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'கண்டல் தாவரம் அழிக்கப்படுவதாலும்;; கழிவு நீரினாலும்; மீன் குஞ்சுகள் அழிக்கப்படுகின்றன. இதனால் மீன்பிடிப்பானது பாதிக்கப்படுகின்றது.
மாடுகள் மற்றும் எருமை மாடுகள் மேயும்; பகுதி முற்றாக இல்லாது போவதால் மாடுகளை வளர்க்கமுடியாதுள்ளது. 

இறால் வளர்ப்பிற்காக உவர்நீர் தேக்கப்படுவதனால் வயல்கள் உவர்த்தன்மையாகி விளைச்சல் பாதிக்கப்படுகின்றன. இதனால், குடிநீர்க் கிணறுகள் உப்புத் தண்ணீராக மாறுகின்றன.

மேலும் இவ் இறால் வளர்ப்புக் காரணமாக சிறந்த வீரர்களைக் கொண்ட தங்களது கழக வீரர்கள் விளையாடும் விளையாட்டத்திடல் நீரில் மூழ்கிவிடுகின்றது' என மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றினை சுட்டிக்காட்டி இறால் வளர்ப்பினை தடைசெய்யுமாறு கூறி,  கரையாக்கந்தீவுக் கிராமத்தைச் சேர்ந்த கிராம அபிவிருத்திச் சங்கம், மட்டுப்படுத்தப்பட்ட விநாயகர் மீன்பிடிக் கூட்டுறவுச் சங்கம், கமலந அமைப்பு, காந்தி விளையாட்டுக் கழகம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், பாரதி சன சமூக நிலையம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பன இணைந்து மேற்படி மகஜிரினை பிரதேச செயலாளர் வெ.தவராஜாவிடம் கையளித்துள்ளனர். 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .