2026 மே 07, வியாழக்கிழமை

மட்டு.மாநகர அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

Kogilavani   / 2013 மே 15 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டு.மாநகரை அபிவிருத்தி செய்து அழகுபடுத்தல் தொடர்பாக தயாரிக்கப்பட்ட திட்டத்தை தெளிவுபடுத்தி அது தொடர்பிலான ஆலோசனைகள் மற்றும் அபிப்பிராயங்களை பங்குதாரர்களிடம் கேட்டறியும் விசேட கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

முழு அளவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மேற்படி திட்டத்தில் மட்டு மாநகரில் அமையப்பெறவேண்டிய சகல நிர்வாக மற்றும் முக்கிய கட்டிடங்கள், விளையாட்டு திடல்கள், வரத்தக கட்டிடங்கள், நூலகம், அருங்காட்சியகம் உள்ளடங்கலாக பல முக்கிய இடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மட்டு மாவட்டத்தை பிரதிநிதித்தவப்படுத்துகின்ற முக்கிய பங்குதாரர்களிடம் அவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கேட்டறியும் முகமாக மேற்படி கலந்துரைடால் சுமார் 4 மணிநேரம் இடம்பெற்றது.

மட்டு.மாநகரை அபிவிருத்தி செய்து அழகுபடுத்தல் தொடர்பான திட்டத்தினை நகர அபிவிருத்தி அதிகார சபையும் மொறட்டுவ பல்கலைகழகமும் இணைந்து ஏற்படுத்தி இருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துரையடாலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதி ஆணையாளர், மட்டு மாநகர ஆணையாளர் சிவநாதன், வர்த்தக சங்க தலைவர், கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேராசியர்கள், விரிவுரையாளர்கள் மட்டக்களப்பு நகரின் முக்கியஸ்த்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0

  • mattakkalappaan Wednesday, 15 May 2013 05:07 PM

    சிலையின் பெயர் கொண்டவர் அவருக்கு தெரியாத விடயத்தை எப்படித்தான்????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .