2026 மே 07, வியாழக்கிழமை

வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

Suganthini Ratnam   / 2013 மே 16 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் நாவற்கேணி கிராமத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள்  பயனாளிகளிடம் நேற்று புதன்கிழமை கையளிக்கப்பட்டன.

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த காலமான 2011ஆம் ஆண்டு தனது விசேட நிதியொதுக்கீட்டில் கிராமங்களை அபிவிருத்தி செய்தல் என்னும் விசேட திட்டத்தின் கீழ், மிகவும் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள வீட்டு வசதிகளற்ற குடும்பங்களைத் தெரிவுசெய்து அவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா செலவில் வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.

இத்திட்டத்தில் முதற்கட்டமாக நாவற்கேணி கிராம சேவையாளர் பிரிவிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடுகளை அமைப்பதற்கான நிதியை கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்;துரை சந்திரகாந்தன் வழங்கியிருந்தார்.

இந்நிலையில், நாவற்கேணி கிராமத்தில் 6 வீடுகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

இதற்கான நிகழ்வில், கிழக்கு மாகாணத்தின்  முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன்,  மண்முனை வடக்கு  பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .