2026 மே 07, வியாழக்கிழமை

பாம்பு தீண்டியதில் ஒருவர் பலி: இருவருக்கு ஆபத்து

Kanagaraj   / 2013 மே 17 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஈச்சிலம்பற்று மற்றும் பூநகர் ஆகிய கிராமங்களில் மூவர் பாம்புக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

இவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈச்சிலம்பற்று சின்னக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரம் பூமணி என்ற 70 வயது மூதாட்டியே இவ்வாறு பலியாகியுள்ளார்.

பாம்புக்கடிக்கு உள்ளாகி விஷம் ஏறிய நிலையில் மரணித்ததாக வெருகல் பிரதேச வைத்தியசாலையில் பொறுப்பு வைத்தியர் பாக்கியதுரை வடிவுக்கரசி தெரிவித்தார். இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை நடந்துள்ளது.

இந்த மூதாட்டி வெருகல் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக மூதூர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட சமயம் அங்கு உயிரிழந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த மூதாட்டியை  புடையன் தீண்டியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பாம்புக்கடிக்கு ஆளாகிய மற்றுமிருவர் வெருகல் பிரதேச வைத்தியசாலையில் இருந்து அவசர மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை மற்றும் மூதூர் வைத்தியசாலைகளுக்கு அவரசர சிகிச்சைகளுக்காக நேற்றைய தினமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் பாக்கியதுரை வடிவுக்கரசி மேலும் தெரிவித்தார்.

ஈச்சிலம்பற்றைச் சேர்ந்த 47 வயதான பி. சரோஜினி மற்றும் பூநகரைச் சேர்ந்த 35 வயதான எஸ்.தங்கேஸ்வரன் ஆகியோரே பாம்புக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .