2026 மே 07, வியாழக்கிழமை

ஏறாவூர் மர்கஸுல் இஸ்லாமி ஜும்ஆ பள்ளி வாயல் திறப்பு நிகழ்வு

A.P.Mathan   / 2013 மே 18 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.ரீ.எம்.பாரிஸ்
 
ஏறாவூர் மர்கஸுல் இஸ்லாமி ஜும்ஆ பள்ளி வாயல் திறப்பு நிகழ்வும் மார்க்கச் சொற்பொழிவும் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
 
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக குவைத் நாட்டின் பெரிய பள்ளி வாயலின் இமாம் அஷ்ஷெய்க் மிஷாரி  அல் ஹர்ராஸ் அவர்களும் ஜமாஅத் அன்சாரில் சுன்னதில் முஹம்மதிய்யாவின் பொது தலைவர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம். அபூபக்கர் சித்தீக் மதனி அவர்களும் அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
 
இப் பள்ளி வாயல் இலங்கை ஜமாஅத் அன்ஸாரில் சுன்னதில் முஹம்மதிய்யாவினால் கிழக்கிழங்கையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாயல்களில் அமைவிடத்திற்கும் பள்ளிக்குமாக 04 நான்கு கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட பெரியதொரு ஜூம்ஆ பள்ளி வாயலாக இது கருதப்படுகின்றது.
 
இந்நிகழ்வில் 'பெண்களே! உங்களுக்குத்தான்' எனும் நூல் வெளியீடும் செய்து வைக்கப்பட்டது.
 
இந்த மஸ்ஜித் திறப்பு நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபீஸ் நஸீர், பிரதி முதல்வர் எம்.எஸ்.சுபையிர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், கல்விமான்கள் என ஆயிரக்கணக்கான இஸ்லாமியச் சகோதரர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .