2026 மே 06, புதன்கிழமை

பாசிக்குடா கடற்கரையை அழகுபடுத்தும் நடவடிக்கை

Kogilavani   / 2013 மே 21 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


சுற்றுலாப் பயனிகளின் வசதி கருதி கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறைக்கு பிரசித்தி பெற்ற பாசிக்குடா கடற்கரையை அழகுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக  சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் வள நிலைய அதிகாரி ஏ.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்புரைக்கு அமைவாக இக் கடற்கரைப் பிரதேசத்தில் துப்புரவு பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதற்கமைவாக நேற்று  சிரமதான பணியொன்று இக்கடற்கரை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இக்கடற்கரையை அழகு படுத்தும் நடவடிக்கையில், கல்குடா இராணுவம், கல்குடா பொலிஸார், சிறு வியாபாரிகள் சங்கம், சவாரி போட் சங்கம், ஹோட்டல் சங்கம், வாழைச்சேனை பிரதேச சபை, மீன் வியாபாரிகள் சங்கம் என்பன ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .