2026 மே 06, புதன்கிழமை

உன்னிச்சை, புல்லுமலைக்கான பஸ் கட்டண அதிகரிப்புக்கு எதிராக நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 மே 22 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்பொடி சசிகுமார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சை மற்றும் புல்லுமலை பகுதிகளுக்கான பஸ் போக்குவரத்துக் கட்டணத்தை அனுமதியின்றி தன்னிச்சையாக உயர்த்தியமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என  கிழக்கு பிராந்திய செயலாற்று முகாமையாளர் எஸ்.கனகசுந்தரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தப் பகுதிக்குமான பஸ் கட்டணத்தை அதிகரிக்காத நிலையிலேயே உன்னிச்சை, புல்லுமலை பகுதிகளுக்கான பஸ் போக்குவரத்து கட்டணத்தை இலங்கை போக்குவரத்துச் சபையின் எந்தவித அனுமதியும்; பெறாது தன்னிச்சையாக மட்டக்களப்புச் சாலை முகாமையாளர்  அதிகரித்தார்.

இது தொடர்பில் கிழக்குப் பிராந்திய சாலை முகாமையாளருக்கும் ஆயித்தியமலை பொலிஸிலும் பொதுமக்கள் முறைப்பாடு செய்தனர்.

இது தொடர்பில் கடந்த 18ஆம் திகதி தான் விசாரணை நடத்தியதாகவும் வழமையான பஸ் போக்குவரத்துக்கு கட்டணத்தை உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவருமாறு பணித்ததைத்  தொடர்ந்து பழைய கட்டணம் தற்போது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு சாலை முகாமையாளருக்கு எதிராக குற்றப்பத்திரம் தயாரிக்கப்பட்டு கொழும்பு தலைமை பணிமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தலைமை பணிமனை என்ன முடிவெடுக்கின்றதோ அதற்கு ஏற்பவே மட்டக்களப்பு சாலை முகாமையாளருக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0

  • vallarasu Wednesday, 22 May 2013 08:20 AM

    நீங்கள் இப்போ நடத்துனரின் களவைப் பிடிக்கிரீங்கலாமே...!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .