2026 மே 06, புதன்கிழமை

முறக்கொட்டாஞ்சேனை கிராமத்தின் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை

Kogilavani   / 2013 மே 23 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


'மட்டக்களப்பு மாவட்டத்தின் முறக்கொட்டான்சேனை கிராமத்தின் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக நடவடிக்கை எடுப்பதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, முறக்கொட்டான்சேனை கிராம மக்கள் வரவேற்பு நிகழ்வொன்றினை நேற்று முன்தினம் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வில்; கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது கிராமத்தின் தேவைகள் மற்றும் அபிவிருத்தி விடயங்கள் குறித்த மகஜர் ஒன்றை முறக்கொட்டான்சேனை மக்கள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தனிடம் கையளித்தனர்.

முறக்கொட்டான்சேனை கிராமத்தில் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்கின்ற சில குடும்பங்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன், அவர்களுக்கு வீட்டு வசதிகளை ஏற்படுத்தி தருவதாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சந்திரகாந்தன் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .