2026 மே 06, புதன்கிழமை

விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பயனின்றி மரணம்

A.P.Mathan   / 2013 மே 24 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
 
வீதி விபத்தொன்றில் அகப்பட்டுக் கொண்ட மட்டக்களப்பு செங்கலடி பாரதிபுரம் வாசியான காளி வடிவேல் எனும் 64 வயது முதியவர் இன்று மரணமானார்.
 
இவர் கடந்த சனிக்கிழமை வாழைச்சேனை கடைத்தெருவில் வைத்து வீதியைக் கடக்கும்போது மோட்டார் சைக்கிளில் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
 
இன்று அவர் சிகிச்சை பயனின்றி மரணித்து விட்டதாக பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.
 
இறந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தை என்றும் அவர் மட்பாண்டங்களைச் செய்து விற்று சீவியம் நடத்தி வந்தவர் என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர். சடலம் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .