2026 மே 06, புதன்கிழமை

கித்துள் சந்தியிலுள்ள கடைக்கு தீ வைப்பு

Suganthini Ratnam   / 2013 மே 27 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவில் கித்துள் சந்தியில் உள்ள சில்லறைக் கடையொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸில் இன்று திங்கட்கிழமை காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனது  கடையை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மூடி விட்டு வீட்டுக்கு வந்ததாகவும் பின்னர் இன்று திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் வீதியால் சென்றவர்கள் கடை தீப்பிடித்துள்ளதாக தகவல் வழங்கினர். இதனைத் தொடர்ந்து நேரில் சென்று தனது கடையை  பார்த்தபோது, கடை முற்றாக எரிவடைந்துள்ளதாக கடை உரிமையாளர் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கரடியனாறு பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .