2026 மே 06, புதன்கிழமை

இரு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய்: குழந்தைகள் பலி

Kanagaraj   / 2013 மே 27 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்ரன்

தனது இரண்டு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய் தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டுள்ளதுடன் குழந்தைகள் இருவரும் பலியாகியுள்ளனர்.

மட்டக்களப்பு மீராவோடை ஆற்றிலேயே குறித்த தாய் இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் தனது இரண்டு குழந்தைகளுடன் குதித்துள்ளார்.

சம்பவத்தில் அவருடைய இரு குழந்தைகளான பூஜா( வயது 7) மற்றும் மூன்றரை வயதான மேனுஜா ஆகிய இருவரும் பலியாகியுள்ளனர். அவர்களுடைய சடலங்கள் மாஞ்சோலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

பிரதேசவாசிகளினால் காப்பாற்றப்பட்ட தாய் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குடும்ப பிரச்சினை காரணமாகவே குறித்த தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .