2026 மே 06, புதன்கிழமை

உலகில் அமைதி வேண்டி இரதயாத்திரை

Kogilavani   / 2013 மே 29 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

அகில இலங்கை ஸ்ரீ கிருஸ்ண பக்திக் கழகத்தின் ஏற்பாட்டில் உலகில் அமைதி வேண்டி எதிர்வரும் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் ஸ்ரீ ஜெகன்நாதரின் இரதயாத்திரை நிகழ்வு நடைபெறவுள்ளது.

அன்றைய தினம், ஸ்ரீ ஜெகனநாதர், ஸ்ரீபலராமர், ஸ்ரீசுபத்திரா சகிதம், ஸ்ரீ ஜெகன்நாதரின் இரதயாத்திரை நிகழ்வு காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இவ் இரத யாத்திரை, மட்டக்களப்பு கல்லடி பேச்சியம்மன் ஆலய துளசி மண்டபத்தில் இருந்து ஆரம்பமாகி பிரதான வீதி ஊடாக கல்லடி மணிக்கூண்டுக் கோபுரம் வரை சென்று மீண்டும் பழைய கல்முனை வீதி ஊடாக மீண்டும் மண்டபத்தை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பகல் 1 மணிக்கு பிரசாதம்(அன்னதானம்) வழங்கப்படும். ஸ்ரீ ஜெகன்நாதரின் இரதயாத்திரை நிகழ்வின்போது, ஸ்ரீ கிருஸ்ண சங்கீர்த்தனம், கலை நிகழ்வுகள், ஆன்மீக சொற்பொழிவுகள் என்பன இடம்பெறவுள்ளன.

ஸ்ரீ ஜெகன்நாதரின் இரதயாத்திரை நிகழ்வில்; ஸ்ரீ கிருஸ்ண பக்திக்கழகத்தின் பிரபுக்கள் 18பேர் கலந்து மக்களுக்கு மகிழ்ச்சியை வழங்கும் வண்ணம் கிருஸ்ண லீலை நிகழ்வுகளையும் நடத்துவுள்ளனர் என அகில இலங்கை ஸ்ரீ கிருஸ்ண பக்திக் கழகத்தின் கிழக்கு மாகாணத்துக்கான இணைப்பாளர் ஸ்ரீ தாமோதரதாஸ் தெரிவித்தார்.

இந்த 18 பிரபுக்களில் அவுஸ்திரேலியா, இந்தியாவின் பிருந்தாவனம், சென்னை ஆகிய இடங்களில் இருந்தும், வருகை தருகின்றனர்.

அதேநேரம் இதில் இருவர் சிங்களவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .