2026 மே 07, வியாழக்கிழமை

காட்டு யானை தாக்கி விவசாயி பலி

Kogilavani   / 2013 மே 29 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
, தேவ அச்சுதன்

மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவு, லாவாணை எனுமிடத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இழக்காகி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்

இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

ஈரலக்குளம் - ஆவட்டியாவெளி கிராமத்தை சேர்ந்த சிவசம்பு சின்னவன் (63 வயது) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக விரட்டிக்கொண்டு காட்டு வழியாகச் சென்றபோது யானையின் தாக்குதலுக்கு இழக்கானதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியாசாலையில் வைக்கபபட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .