2026 மே 06, புதன்கிழமை

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

Kogilavani   / 2013 மே 29 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான கலந்தாலோசிக்கும் கூட்டம்  இன்று புதன்கிழமை, மட்டக்களப்பு கமநல சேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெற்றது,

மட்டக்களப்பு கமநல சேவைகள் உதவி ஆணையாளர் பொருளியலாளர் சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமுர்த்தி முரளிதரன்  கலந்துகொண்டார்.

அத்துடன் 17 நிலையங்களைச் சேர்ந்த கமநல அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் அதில் கலந்துகொண்டர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அதற்கான தீர்வுகள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .