2026 மே 07, வியாழக்கிழமை

நீரில் மூழ்கி இளைஞர் மரணம்

Suganthini Ratnam   / 2013 மே 29 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள உறுகாமக் குளத்தில் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி மரணமாகியுள்ளார்.

தும்பாலஞ்சோலை பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம்  யசோ (வயது 23) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை குளத்தில் குளிக்கச் சென்ற இவரின் ஆடைகள் குளக்கரையில் காணப்பட்டுள்ளன.

சடலம் செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு வைத்தியர் கே.சுகுமார் முன்னிலையில், பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் பிரேத பரிசோதனை நடத்தினார்.

இது தொடர்பான விசாரணையை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .