2026 மே 07, வியாழக்கிழமை

மனைவி காணாமல் போயுள்ளதாக கணவர் முறைப்பாடு

Suganthini Ratnam   / 2013 மே 31 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்

தனது மனைவி காணாமல் போயுள்ளதாகவும் அவரை கண்டுபிடித்துத் தருமாறு கோரியும் அவரது கணவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள முறக்கொட்டாஞ்சேனை ஏரிக்கரை வீதியைச் சேர்ந்த கந்தையா பிரதீபன் (வயது 33) என்பவரே நேற்று வியாழக்கிழமை இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

4 பிள்ளைகளின் தாயான 27 வயதுடைய தனது மனைவி பரமானந்தம் சசிகலா என்பவர் கடந்த 16 நாட்களாக காணாமல் போயுள்ளார்.

கடைசியாக 14.05.2013 அன்று தனது மனைவி பிள்ளைகளுடன் வீட்டில் காணப்பட்டார். அதன் பின்னரே அவர் காணாமல் போயுள்ளார். அவரது கையடக்கத் தொலைபேசியும் தற்போது பாவனையில் இல்லை. எல்லா இடங்களிலும் விசாரித்துப் பார்த்தோம். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.  தாய் எப்போது வருவார் என குழந்தைகள் எந்தநேரமும் அழுதவண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், எப்படியாவது தனது மனைவியை கண்டுபிடித்துத் தருமாறும் தனது குழந்தைகளின் கண்ணீரை துடைக்குமாறும் பாதிக்கப்பட்ட நபர் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

தனது மனைவி காணாமல் போனமை தொடர்பில் ஏற்கெனவே மட்டக்களப்பு பொலிஸிலும் தான் முறைப்பாடு செய்ததாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்தார்.

இது தொடர்பான விசாரணையை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .