2026 மே 06, புதன்கிழமை

உலக செஞ்சிலுவை தினத்தினை முன்னிட்டு இரத்ததானம்

Kogilavani   / 2013 மே 31 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


உலக செஞ்சிலுவை தினத்தினை முன்னிட்டு, இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரிவின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான நிகழ்வொன்று நேற்று போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதில் பொலிஸார், இரணுவத்தினர், பிரதேச செயலக, பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க தொண்டர்கள் என பலர் இரத்ததானம் வழங்கினர்.

'மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின்  இரத்த வங்கியில் இரத்த சேமிப்பு குறைவடைவதனால் இதுபோன்ற இரத்த நன்கொடையாளர்கள் வழங்கும் இரத்தம் ஏழைகளின் உயிர் காக்க உறுதுணையாக அமைகின்றது' என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி நிர்வாகம் தெரிவிக்கின்றது.

இவ்வாறான இரத்ததான நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் எனைய பகுதிகளிலும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை; தெரிவிக்கின்றது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .