2026 மே 09, சனிக்கிழமை

dd

வாக்காளர் தினத்தையொட்டி

Kogilavani   / 2013 ஜூன் 01 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்
, ஜவர்கான்

வாக்காளர் தினத்தையொட்டி மட்டக்களப்பில் வாக்களர்களை விழிப்பூட்டும் விழிப்புணர்வு ஊர்வலமொன்று இன்று காலை நடைபெற்றது.

மட்டக்களப்பு உதவி தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழிப்புணர்வு ஊர்வலம், மட்டக்களப்பு உதவி தேர்தல் ஆணையாளர் அலுவலகத்திலிருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு நகர் ஊடாக சென்று மீண்டும் அலுவலகத்தை வந்தடைந்தது.

இதன்போது வாக்காளர்களை விழிப்பூட்டும் பிரசுரங்களும் தேர்தல் திணைக்கள அதிகாரிகளினால் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

மட்டக்களப்பு உதவி தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தின் பிரதான முகாமைத்துவ உதவியாளர் எம்.தில்லைவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்பனர்வு ஊர்வலத்தில் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், அதிகாரிகள் பங்குகொண்டனர்.

ஜுன் மாதம் முதலாம் திகதி வாக்காளர் தினமாக தேர்தல் ஆணையாளரினால் பிரகடணப்படுத்தப்பட்டுள்ளமை குறி;ப்பிடத்தக்கது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .