2026 மே 09, சனிக்கிழமை

dd

மட்டக்களப்பில் மேலும் இரண்டு இந்து கோவில்களில் திருட்டு

Kogilavani   / 2013 ஜூன் 02 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல்-சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் இரண்டு இந்துக் கோவில்களில் நேற்று இரவு திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி, மாங்காடு கிராமத்தில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் மூல விக்கிரகம் மற்றும் நவக்கிரகங்கள் என்பன உடைக்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதேவேளை, கிரான்குளம் கிராமத்திற்கும் இடைப்பட்ட பகுயில் உள்ள ஐயனார் ஆலயத்திலும் உண்டியல் உடைக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .