2026 மே 06, புதன்கிழமை

சிறுமியை வல்லுறவு புரிந்த சந்தேக நபர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜூன் 03 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்,-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 11 வயது சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 20 வயதுடைய இளைஞர் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சிறுமி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை குளிப்பதற்காகச்; சென்றபோதே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சிறுமியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சிறுமி வைத்தியப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை  இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .