2026 மே 06, புதன்கிழமை

களுவாஞ்சிக்குடி கோவில்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பங்கள் தொடர்பில் விசாரணை

Suganthini Ratnam   / 2013 ஜூன் 03 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 3 கோவில்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருக்கள்மடம் செல்லக்கதிர்காமர் கோவில், குருக்கள்மடம் ஐயனார் கோவில், மாங்காடு பிள்ளையார் கோவில் ஆகிய கோவில்களே நேற்று ஞாயிற்றுக்கிழமை உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளன. 

இதன்போது பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காமர் கோவிலில் மூலவிக்கிரகம், பரிபால விக்கிரகங்கள்; உடைக்கப்பட்டு அதன் கீழிருந்த தங்கத்தகடுகள் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன், இந்தக் கோவிலின் களஞ்சியசாலை உடைக்கப்பட்டு அங்கிருந்த தங்கநகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இவ்வாறே மாங்காடு பிள்ளையார் கோவிலின்; மூலவிக்கிரகம் உடைக்கப்பட்டு அதற்கு கீழிருந்த தங்கத்தகடு கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .