2026 மே 07, வியாழக்கிழமை

'சமூக விஞ்ஞானங்களின் தற்காலப் போக்குகள்' கலந்துரையாடல்

Kogilavani   / 2013 ஜூன் 01 , பி.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


 'சமூக விஞ்ஞானங்களின் தற்காலப் போக்குகள்' எனும் தலைப்பிலான விசேட விரிவுரையானது நேற்று முன்தினம் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானக் கற்கைகள் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  இவ்விரிவுரையானது, சர்வதேச ரீதியாக சிறந்த பொருளியல் ஆய்வாளராக கணிக்கப்படுகின்றவரும் அவுஸ்திரேலியாவில் மொர்டொக் பல்கலைக்கழகத்திலும், புறூணைன் பல்கலைக்கழகத்திலும் பொருளியல் விரிவுரையாளராக கடமைபுரிந்தவருமான கலாநிதி அமீர் அலியால் நிகழ்த்தப்பட்டது.

இவ்விரிவுரையினைத் தொடர்ந்து கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையினரால் தற்காலத்தில் அதிகரித்து வரும் தற்கொலை சம்பவங்களின் காரணங்கள் தொடபாக விசேட கலந்துரையாடலும் நடைபெற்றது.

இதன்போது விசேடமாக பொருளாதார ரீதியான காரணங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இந்நிகழ்வுகளில் கலைகலாசாரப் பீடாதிபதி, பேராசிரியர் மௌனகுரு, துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.

காத்தான்குடியை பிறப்பிடமாகக் கொண்ட இவர், இன்றைய கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உதயத்திற்கு அத்திவாரமாய் அமைந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் 1950களின் நடுப்பகுதியில் ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை தனது கல்வியைப் பெற்றுக்கொண்ட இவர், இலங்கையின் பேராதனைப் பல்கலைகழகத்தில் பொருளியல் சிறப்புப்பட்டத்தினைப் பெற்று பொருளியல் விரிவுரையாளராக கடமைபுரிந்தார்.

இவர் தனது முதுகலைமாணிப் பட்டத்தினை இலண்டன் பொருளியல் கல்லூரியிலும் தனது கலாநிதிப் பட்டத்தினை மேற்கு அவுஸ்ரேலியா பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .