2026 மே 09, சனிக்கிழமை

இரு மாதங்களுக்குள் சட்டவிரோத வலைகள் முற்றாக ஒழிக்கப்படும்: டொமின்கோ ஜோர்ஜ்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 04 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாவிகளில் சட்டவிரோத வலைகளைக் கொண்டு மீன்பிடிக்கும் நடவடிக்கை இன்னும் 2 மாதங்களுக்குள் முற்றாக ஒழிக்கப்படுமென அந்த மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தெரிவித்தார். 

சட்டவிரோத வலைகளைக் கொண்டு மீன்பிடித்தலை ஒழிக்கும் நடவடிக்கையில் தற்போது 60 சதவீதம் வரை பூர்த்தியடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சட்டவிரோத வலைகளை ஒழிக்கும் நடவடிக்கையின் கீழ், கடந்த 3 வருடங்களில் 300 பேர் கைதுசெய்யப்பட்டு அவர்களின் மீது வழக்குத் தாக்கல்
செய்யப்பட்டன. இந்நிலையில், அவர்களிடமிருந்து 2 கோடியே 50 இலட்சம் ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வலைகள் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தெரிவித்தார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .