2026 மே 06, புதன்கிழமை

புன்னைச்சோலை, ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய திருவிழாவினை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

Kogilavani   / 2013 ஜூன் 04 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு, புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி  அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு ஆலய வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 200 பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த இரண்டாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து  இடம்பெற்று வருகின்றது.

இதன் இறுதிநாள் உற்சவம் எதிர்வரும் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் ஆலயத்திற்கு வரும் பக்த அடியார்களின் பாதுகாப்புக் கருதியும், சுற்றுச் சூழலில் ஏற்படுகின்ற கொள்ளை மற்றும் குற்றச் செயல்களைத் தடுக்கும் பொருட்டும் இப் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜந்த சமரக்கோனின் பணிப்பின்பேரில் அப்பிரதேசத்தில் விசேட பொலிஸ் காவலரன் ஒன்றும் அமைக்கப்பட்டு 200 பொலிஸாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .