2026 மே 07, வியாழக்கிழமை

கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச சபையை உருவாக்க முயற்சி

Suganthini Ratnam   / 2013 ஜூன் 05 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

கோறளைப்பற்று தெற்கு (கிரான்) எனப் பெயரிடப்பட்ட புதிய பிரதேச சபையொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கான பிரேரனைகளை ஆராய புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு (கிரான்) என்ற பெயரில் புதிய பிரதேச சபையினை வகுத்து உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இப்பிரதேச சபையினை உருவாக்கும் பொருட்டு மூவர் அடங்கிய குழுவொன்றை மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சர் நியமித்துள்ளார்.

நியமிக்கப்பட்டுள்ள குழுவுக்குத் தலைவராக கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். குழுவின் செயலாளராக மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திருமதி என் சத்தியானந்தியும் குழுவின் உறுப்பினராக மட்டக்களப்பு நில அளவைத் திணைக்கள அத்தியட்சகர் எம்.எம்.காமினி வீரசிறியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நியமிக்கப்பட்டுள்ள குழு புதிய பிரதேச சபையினை உருவாக்குவதற்கான பிரேரனைகளை ஆராயவுள்ளது.  இப்புதிய பிரதேச சபை கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச சபை பிரிவின் ஒரு பகுதியையும் கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச சபை பிரிவின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியதாக அமையவுள்ளது.

மேலும், இக்குழுவானது உருவாக்கவிருக்கும் புதிய பிரதேச சபையினது எல்லையினுள் உள்ள குடிமக்களின் வாழ் வசதிகளுக்காக அப் பிரதேச சபையினது எல்லைகளையும் தீர்மானித்துள்ளது.

மேலும் அபிவிருத்தி, பிரதேச சபைக்குத் தெரிவு செய்யப்படும் அங்கத்தவர்கள் எண்ணிக்கை, அருகாமையில் உள்ள ஏதாவது உள்ளூராட்சி மன்றங்களை பாதிக்குமா போன்ற விடயங்களில் இக்குழு ஆராயவுள்ளது.

இதற்கமைவாக பொதுமக்கள் மற்றும் ஏற்புடையதான பொது நிறுவனங்களிடமிருந்தும் பிரேரணைகளை எழுத்து மூலம் 2013.06.17ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்குமாறு அக்கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளது.

பிரேரணைகளை, கே.தனபாலசுந்தரம்,கோறளைப்பற்று தெற்கு எனப் பெயரிட்டு புதிய பிரதேச சபை உருவாக்கத்திற்கான குழுவின் தலைவரும் பிரதேச செயலாளரும் கோறளைப்பற்று தெற்கு (கிரான்) என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளது.


  Comments - 0

  • sabeshan Saturday, 08 June 2013 07:22 AM

    இது தேவையான வேலைத்திட்டம் ஒன்றாகும், இதனை யாராலும் தடுத்து விடவும் முடியாது...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .