2026 மே 07, வியாழக்கிழமை

காத்தான்குடி தோணாக் கால்வாயை புனரமைக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 ஜூன் 07 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள புதிய காத்தான்குடி தோணாக் கால்வாயை புனரமைத்து சீரமைப்பதன் மூலம் காத்தான்குடி பிரதேசத்தில் ஒவ்வொரு வருடமும் ஏற்படும் வெள்ள அனர்த்தத்தை தடுக்க முடியும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி பிரதேசத்தில் வெள்ளநீரை வடிந்தோடச் செய்வதற்கான நடவடிக்கைகள் பற்றி ஆராயும் கூட்டம் காத்தான்குடி நகர சபையில் நகர சபைத் தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் நேற்று வியாழக்கிழமை  நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஒவ்வொரு வருடமும் மாரி காலத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் ஏற்படும் வெள்ள அனர்த்தத்திலிருந்து மக்களை பாதுகாத்து வெள்ளநீரை வடிந்தோடச் செய்வதற்கு எவ்வாறான  நடவடிக்கைகளை  மேற்கொள்வது என்பது பற்றி ஆராயப்பட்டது.  இந்த நிலையில்,  காத்தான்குடி பெரிய தோணாக்கால்வாய் மற்றும் கரையோர தோணாக்கால்வாய் என்பவற்றை புனரமைப்பதற்கு இந்தக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் திட்ட உத்தியோகத்தர் ஜே.நக்கீல், நகர அபிவிருத்தி திட்ட உத்தியோகத்தர் ஏ.எம்.நாசர், மற்றும் அனர்த்த முகாமைத்துவ செயலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலக உத்தியோகத்தர் ஏ.ஜே.எம்.அல்தாப் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .