2026 மே 09, சனிக்கிழமை

dd

புனரமைக்கப்பட்ட வீதிகள் மக்கள் பாவனைக்கு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 09 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட வடிகான் மற்றும் புனரமைக்கப்பட்ட கொங்கிறீட் வீதிகள் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளன.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று சனிக்கிழமை இவற்றினை திறந்துவைத்து மக்கள் பாவனைக்கு கையளித்துள்ளார்.

ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபா செலவில் புதிய காத்தான்குடி பரீட் நகர் உள்ளக வீதி, பெண்கள் சந்தை வீதி, தோனா வீதி ஆகிய கொங்கிறீட் வீதிகளின் புனரமைக்கப்பட்டதுடன், வடிகானும் அமைக்கப்பட்டது.

காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான எச்.எம்.பாக்கீர், எம்.அலிசப்ரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .