2026 மே 07, வியாழக்கிழமை

உணவுகளை கையாளும் ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை

Suganthini Ratnam   / 2013 ஜூன் 10 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகர சபை பிரிவில் உள்ள சிற்றுண்டிச்சாலைகள், ஹோட்டல்கள், பேக்கரிகள் ஆகியவற்றில் கடமையாற்றும் ஊழியர்களுக்கும் அங்காடியாக உணவுகளை விற்பனை செய்பவர்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காத்தான்குடி நகர சபை பிரிவில் உள்ள சிற்றுண்டிச்சாலைகள், ஹோட்டல்கள், பேக்கரிகள் ஆகியவற்றில் கடமையாற்றும் ஊழியர்களினதும் அங்காடியாக உணவுகளை விற்பனை செய்பவர்களினதும் உடல் ஆராக்கியம் தொடர்பான மருத்துவ அறிக்கையை காத்தான்குடி சுகாதார வைத்தியர் அலுவலகம் கோரியுள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

இவர்களுக்கு தொற்றுநோய்கள் ஏதாவது உள்ளனவா என்பதை பரிசோதனை செய்யும் பொருட்டு இந்த மருத்துவ அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவர்களின் இரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு அதற்கான அறிக்கைகள் காத்தான்குடி சுகாதார வைத்திய அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.

இந்த மருத்துவ அறிக்கைகள் ஒப்படைக்கப்பட்டு சுகாதார அதிகாரிகளினால் அந்த அறிக்கைகள் தொடர்பில் திருப்தி காணப்படின் சிற்றுண்டிச்சாலைகள், ஹோட்டல்கள், பேக்கரிகள் ஆகியவற்றில் கடமையாற்றும் ஊழியர்களுக்கும் அங்காடியாக உணவுகளை விற்பனை செய்பவர்களுக்கும்;  அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார். 

காத்தான்குடி நகர சபை மற்றும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .