2026 மே 09, சனிக்கிழமை

தோனா கால்வாய் துப்புரவு பணிக்காக சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற தீர்மானம்

Kogilavani   / 2013 ஜூன் 11 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்


காத்தான்குடி பிரதேசத்திலுள்ள பெரிய தோனா கால்வாயையும் மற்றும் கரையோர தோனா கால்வாயையும் தோண்டி துப்பரவு செய்வதற்காக அப்பகுதியிலுள்ள சட்ட விரோதக்கட்டிடங்களை அகற்றுவதற்கான தீர்மானம் நேற்று திங்கட்கிழமை காத்தான்குடி நகர சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

காத்தான்குடி நகர சபையின் கூட்டத்தின்போதே இத்தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.

காத்தான்குடி நகர சபை பிரிவில் வருடாந்தம் ஏற்படும் வெள்ள அனர்த்தத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு வெள்ளம் வடிந்தோடச் செய்யும் வகையில் காத்தான்குடியிலுள்ள பெரிய தோனா கால்வாயையும் கரையோர தோனா கால்வாயையும் தோண்டி துப்புரவு செய்வதற்கான பிரேரணையை நகர சபை தலைவர் எஸ்எச்.அஸ்பர் இதன்போது சபையில் முன்வைத்தார்.

இதற்கமைவாக, காத்தான்குடி நகரசபை பிரிவிலுள்ள பெரிய தோனாக்கால்வாய் 6 மீற்றர் அகலத்திலும் கரையோர தோனாக்கால்வாய் 3 மீற்றர் அகலத்திலும் தோண்டி துப்புரவு செய்வதுடன் அந்தப்பகுதியிலுள்ள சட்டவிரோத கட்டிடங்களையும் அகற்றுவதென சபையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

வருடாந்தம் மழைக்காலத்தில் காத்தான்குடி நகரசபை பிரிவில் ஏற்படும் வெள்ள அனர்த்தத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு இந்த இரண்டு தோனா கால்வாய்களையும் தோண்டி துப்புரவு செய்து வெள்ள நீரை வடிந்தோடச் செய்வதற்கு இதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நகரசபை தலைவர் அஸ்பர் மேலும் குறி;பிபட்டார்.

இதேவேளை, இலங்கையில் டெங்கு நுளம்பு பரவும் நான்காவது மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் பிரகடனப்படுத்தப்படுள்ளதால் அம்மாவட்டத்தில் டெங்கு நுளம்பை ஒழிக்கும் வேலைத்திட்டங்கள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக  நேற்று  காத்தான்குடி நகரசபை பிரிவில் பாரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குபா இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுஜாத் தலைமையில் இங்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, அல்ஹிறா பிரதேசம் முழுமையாக சிரமதானத்திற்குட்படுத்தப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .