2026 மே 09, சனிக்கிழமை

dd

பிரதேச புனர்வாழ்வுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் கையளிப்பு

Menaka Mookandi   / 2013 ஜூன் 12 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

பிரதேச புனர்வாழ்வுத் திட்டத்தின் கீழ் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் கடந்த கால வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு நீண்ட காலப் பயன்தரும் மரக்கன்றுகள் விநியோகிக்கும் நடவடிக்கையில் வேர்ல்ட் விஷன் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட குடும்பமொன்றிற்கு தென்னை, பலா, வாழை மற்றும் தேன்தோடை ஆகிய 10 கனிவர்க்க மரக்கன்றுகளும் கூட்டுப் பசளை தயாரிக்கும் கொள்கலன்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

மாவடிச்சேனை, முத்துச்சேனை, பூநகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 110 குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் விநியோகிக்கும் வைபவம் நேற்றும் இன்றும் இடம்பெற்றது. பிரதேச செயலாளர் பி.தனேஸ்வரன் மரக்கன்று விநியோகத்தை ஆரம்பித்து வைத்தார்.

அரசு அறிமுகப்படுத்தியுள்ள திவிநெகும பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தை ஊக்குவிக்கும் முகமாக பிரதேச புனர்வாழ்வுத் திட்டத்தின் கீழ் இந்த மரக்கன்று விநியோகம் இடம்பெறுவதாகவும் இந்தக் கனிவர்க்க மரங்களைப் பராமரித்துப் பாதுகாத்து வளர்த்தெடுப்பதன் மூலம் ஆரோக்கியத்துக்கான கனிகளையும் பொருளாதார வளத்தையும் பெற்றுக் கொள்ள முடியும் என வேர்ல்ட் விஷன் திட்ட இணைப்பாளர் கே.லிங்கராஜா தெரிவித்தார்.

பிரதேச செயலகம் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிப்பிரிவு என்பனவற்றின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .