2026 மே 07, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் பட்டதாரி பயிலுனர்களுக்கு செயலமர்வு

Menaka Mookandi   / 2013 ஜூன் 12 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய அமைச்சு மற்றும் சிறு ஏற்றுமதிப் பயிர்கள் திணைக்களம் ஆகியவற்றின் கீழ் இணைக்கப்பட்டுள்ள 49 பட்டதாரிப் பயிலுனர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை நடைபெற்றது,

மாவட்ட செயலக விவசாயத் திணைக்கள் அலுவலகத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் பி.உகநாதன் தலைமையில் ஆரம்பமான இப்பயிற்சிப் பட்டறை தொடர்ந்து மூன்று தினங்கள் நடைபெற்று செவ்வாயன்று நிறைவுபெற்றது.

சத்துருக்கொண்டானிலுள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையில், பிரதம அதிதியாக விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர் அசோக சிறிவர்த்தன கலந்து கொண்டார்.

அத்துடன் வளவாளராக விவசாயத்திணைக்களத்தின் பேராதனை உதவி பீடை நாசினிப் பணிப்பாளர் கலாநிதி சுமித் ஜயக்கொடி ஆராய்சிகே, மாவட்ட செயலக கணக்காளர் கே.பிரேமகுமார், மாவட்ட செயலக அலுவலக உதவியாளர் ஆர்.தயாபரன் ஆகியோர் கலந்து கொண்டார்.

இப்பட்டறையில் விவசாய அபிவிருத்தி தந்திரோபாயங்கள் தொடர்பாக பங்களிப்புச் செய்யும் அனைத்து நிறுவனங்களது செயற்பாடுகள் பற்றி பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் வகையில் தெளிவு படுத்தப்பட்டன.

அத்துடன், விவசாய அபிவிருத்தி, அலுவலக, நிதி, நிருவாக நடைமுறைகள், விவசாயத் தொழில்நுட்பம், விதை அத்தாட்சிப்படுத்தலும் விநியோகமும், கமநல அபிவிருத்தி தொடர்பிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .