2026 மே 07, வியாழக்கிழமை

மட்டு. புத்தர் சிலை நிறுவும் விவகாரம்; மனித உரிமை ஆணைக்குழுவிடம் தேரர் புகார்

Menaka Mookandi   / 2013 ஜூன் 12 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு  பிள்ளையாரடி வளைவில் புத்தர் சிலை நிறுவும் விவகாரத்தை மட்டக்களப்பு மங்களராமய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

இது விடயமாக செவ்வாய்க்கிழமை, எழுத்து மூலமான முறைப்பாடொன்றை மட்டக்களப்பு மங்களராமய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர், தன்னிடம் கையளித்துள்ளதாக மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் இ.மனோகரன் தெரிவித்தார்.

இதனிடையே இந்த விவகாரம் ஏற்கெனவே மட்டக்களப்பு நீதிமன்றத்தின் கவனத்திற்கு பொலிஸாரினால் கொண்டுவரப்பட்டு குறித்த இடத்தில் புத்தர் சிலை நிறுவுவது பொதுத் தொல்லையையும் சமூக அமைதிக்குப் பங்கத்தையும் ஏற்படுத்தும் என பொலிஸார் தமது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிந்ததன் பேரில் குறித்த இடத்தில் புத்தர் சிலை வைப்பதற்கு  தடை விதித்து அது தொடர்பான வேலைகளை  நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .