2026 மே 09, சனிக்கிழமை

குடும்பத்தை கடத்திய கும்பல் கைது

Kanagaraj   / 2013 ஜூன் 13 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்,தந்தை மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகளை கடத்திய அறுவர் கொண்ட கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளதாக இராணுவப்பேச்சாளர் றுவான் வணிகசூரிய தெரிவித்தார்.

தங்களை இராணுவம் என அடையாளம் காட்டிக்கொள்ளவதற்கு முயன்ற கும்பலையே பொலிஸார் கைது செய்துள்ளதாகவும். இது இராணுவத்தின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

துன்மன்கேணியிலிருந்து தாய்,தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் அடங்களாக நான்குபேரை வெள்ளைவானில் வந்த ஆறுபேர் கடத்திச்சென்றுள்ளனர்.

ஆயுதப்படைகளை சேர்ந்தவர்களென கூறிக்கொண்டே அந்த குழுவினர் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் கிராம மக்களால் பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,வெள்ளை வானில் வந்த சிலரை நேற்று 12 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மட்டக்களப்பு, மண்முனை பொலிஸார் கைது செய்தனர்.

தாங்கள் அக்கறைப்பற்றிலுள்ள இராணுவ முகாம் ஒன்றுக்கு போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு இடமளிக்காத பொலிஸார் அவர்களிடம் தொடர்ச்சியாக மேற்கொண்ட விசாரணைகளில் தனிப்பட்ட பகைமை காரணமாகவே இந்த குடும்பத்தை அவர்கள் அறுவரும் கடத்தியதாக தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்பு படையினரின் நற்பெயரை கெடுக்கும் வகையில் இவ்வாறான சம்பவங்களை திட்டமிட்ட குழுவினர் மேற்கொண்டுவருவதாகவும் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பொலிஸார் கைது செய்தமையினால் படையினருக்கு ஏற்படவிருந்த அவப்பெயர் தவிர்க்கப்பட்டுவிட்டதாக இராணுவப்பேச்சாளர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .